மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான கராத்தே போட்டி

பெரம்பலூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது.

தினத்தந்தி

பெரம்பலூர்,


முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. போட்டியை பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன், பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி செயலாளரும், பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான இளம்பை ரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 5 வயது முதல் 55 வயதிற்கு உட்பட்ட வீரர்- வீராங்கனைகளுக்கு 10 பிரிவுகளாக தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் கட்டா, ஸ்பேயரிங், வெப்பன் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கராத்தே வீரர்- வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று வீரர்-வீராங்கனைகளுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை அரியலூர்- பெரம்பலூர் மாவட்ட இஷின்ரியூ கராத்தே கழகத்தினர் செய்திருந்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு