பூந்தமல்லி,
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பூந்தமல்லி கோர்ட்டு எதிரே திரண்ட 100-க்கும் மேற்பட்டோர் தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று உடனடியாக தமிழக முதல்-அமைசசர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றும், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பூந்தமல்லி போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.