மாவட்ட செய்திகள்

அருமந்தை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை வழங்கக்கோரி மறியல்

அருமந்தை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை வழங்கக்கோரி மறியல் போராட்டம் நடந்தது.

மறியல்

பொன்னேரி அடுத்த சோழவரம் ஒன்றியத்தை சேர்ந்த அருமந்தை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஊராட்சியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்கப்பட வில்லை. இதனை கண்டித்தும் தேசிய ஊரக வேலை செய்யும் பெண்கள் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சோழவரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் விக்ரமன், சோழவரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வேலை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்