மாவட்ட செய்திகள்

செல்போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

செல்போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

சேலம்,

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள காமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். வெள்ளி பட்டறை தொழிலாளி.இவரது மகள் சவுமியா (வயது 16) . இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் பள்ளிகள் திறக்கவில்லை.

இதனால் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவி சவுமியா ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்று வந்தார். இந்த நிலையில் சவுமியா நேற்று இரவு செல்போனில் விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த பெற்றோர் பாடம் படிக்காமல் செல்போனில் என்ன விளையாட்டு என்று கேட்டுள்ளனர்.

இதனால் மன விரக்தி அடைந்த மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சவுமியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது