மாவட்ட செய்திகள்

மாணவ-மாணவிகளை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது; தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

மாணவ-மாணவிகளை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது என்று தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் ராகுல்நாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கலெக்டர் ஆய்வு

செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின் நிருபர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் நேற்று திறக்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் என 593 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2021-2022-ம் கல்வியாண்டில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 376 ஆகும்.

தடுப்பூசி செலுத்தும் பணி

பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. 95 சதவீத பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 சதவீத பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக கல்வி கற்க ஏதுவாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருகை புரியும் போது தெர்மல் ஸ்கேனர் மூலம் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய ஆசிரியர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டாயப்படுத்த கூடாது

மாணவ-மாணவிகள் பயன்படுத்த கிருமி நாசினி, முககவசம் போன்றவை தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது, மேலும் கழிவறைகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கு வராமல் வீட்டில் இருந்து கல்வி பயில விருப்பம் தெரிவித்த மாணவ-மாணவிகளுக்கு அவர்களின் விருப்பத்தின்படி வீட்டிலேயே கல்வி பயில அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு மாணவரையும் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது என அனைத்து பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பள்ளி முதல்வர்களை கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலா, செங்கல்பட்டு நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி, ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்