மாவட்ட செய்திகள்

போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மரணம்

சேலையூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஹரிராமன்(வயது 58). விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மாடம்பாக்கம் ஏ.எல்.எஸ். நகரில் வசித்து வந்தார். நேற்று மதியம் வழக்கம்போல் பணிக்கு வந்த ஹரிராமன், போலீஸ் நிலையத்தில் உள்ள தனது இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

வலியால் துடித்த அவரை சக போலீசார் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சப்-இன்ஸ்பெக்டர் ஹரிராமன் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு ராஜேஸ்வரி(50) என்ற மனைவியும், சோமஸ்கந்தன்(28) என்ற மகனும் உள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு