மாவட்ட செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 குட்டிகளை ஈன்ற சதுப்பு நில மான்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 குட்டிகளை ஈன்ற சதுப்பு நில மான்.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கு தடை விதித்து மூடப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதில் நீலா (வயது 9), பத்மநாபன் (12) ஆகிய 2 சிங்கங்கள் உயிரிழந்தது.

இந்தநிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சதுப்பு நிலமான் என அழைக்கப்படும் பாராசிங்கா என்ற மான் 2 குட்டிகளை ஈன்றுள்ளது. பூங்காவிலுள்ள சருகுமானும் குட்டியை ஈன்றுள்ளது. இதனால் இப்பூங்காவில் மொத்தம் 13 சருகு மான்கள் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் சிங்கவால் குரங்கு ஒரு குட்டியை ஈன்றுள்ளது.

புதியதாய் பிறந்த அனைத்து குட்டிகளும் தொடர்ந்து விலங்கு காப்பாளர்கள் மற்றும் வனவிலங்கு டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்