மாவட்ட செய்திகள்

சேலத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கையை வலியுறுத்தி அக்கட்சி சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம்,

தமிழகத்தில் பட்டியல் பிரிவில் உள்ள குடும்பர், காலாடி, பண்ணாடி, பள்ளர், கடையர், தேவேந்திரகுலத்தார், வாதிரியார் ஆகிய பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவித்து அரசாணை வெளியிட தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி அக்கட்சி சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் வடக்கு மண்டல செயலாளர் ஜீவஜோதி தலைமை தாங்கினார்.

இதில் கருப்பு சட்டை அணிந்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றதுடன், கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் அவர்கள் இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தனர்.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்