மாவட்ட செய்திகள்

தமிழக-கேரள எல்லை கிராமங்களில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து

மாவோயிஸ்டுகள் தாக்கும் அபாயம் உள்ளதால் தமிழக-கேரள எல்லையில் உள்ள வனங்கள் மற்றும் அதனை ஒட்டி உள்ள கிராமப்பகுதிகளில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கூடலூர்,

கேரள மாநிலம் நிலம்பூர் வனப்பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 24-ந் தேதி பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகளுக்கும், கேரள தண்டர்போல்ட் அதிரடிப்படை போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இதில் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

போலீசார் நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்டுகள் இறந்து ஒரு ஆண்டு நிறைவு பெற உள்ளது. இதனால் மாவோயிஸ்டுகள் எந்த நேரத்திலும் தாக்கும் அபாயம் உள்ளது. இதை தொடர்ந்து வயநாடு, பாலக்காடு, மலப்புரம், கண்ணனூர் உள்ளிட்ட மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கபபட்டுள்ளது. இதேபோல் தமிழக-கேரள எல்லையில் கூடலூர், பந்தலூர், மஞ்சூர் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் உள்ள கிராமங்களில் தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டுள்ளனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்