திரு.வி.க.நகர்,
சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்தவர் ஹரிமஞ்சன் (வயது 47). இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் உறவினரின் 14 வயதான மகள் தங்கி இருந்து, அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்நிலையில், சிறுமி திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உறுப்பினர் லலிதாவிடம் தெரிவித்தனர். அவர், இதுபற்றி புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணையில் சிறுமியின் பெற்றோர், உளுந்தூர்பேட்டையில் தோட்ட வேலை செய்து வருவதும், இதனால், சிறுமி தனது உறவினரான ஹரிமஞ்சன் வீட்டில் தங்கி படித்து வருவதும், உறவினர் மகள் என்றும் பாராமல் அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதயைடுத்து தமிழ் ஆசிரியர் ஹரிமஞ்சனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.