மாவட்ட செய்திகள்

கருணாநிதி பிறந்தநாளன்று ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு, தமிமுன் அன்சாரி வேண்டுகோள்

கருணாநிதி பிறந்தநாளன்று ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு, தமிமுன் அன்சாரி வேண்டுகோள்.

சென்னை,

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்த சிறைவாசிகளை அண்ணா பிறந்தநாள், எம்.ஜி.ஆர். பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்வது தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. புதிதாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்று, அனைவரும் பாராட்டும் வகையில் செயல்பட்டு வரும் மு.க.ஸ்டாலின், கருணாநிதி பிறந்த நாளையொட்டி வருகிற ஜூன் 3-ந்தேதியன்று ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்வதாக அறிவிப்பை வெளியிட்டால் இந்த ஆட்சிக்கு அது மேலும் சிறப்பு சேர்க்கும்.

சிறை தண்டனையின் நோக்கமே ஒருவரை திருத்தி, மீண்டும் சமூகத்துடன் வாழச் செய்வதே ஆகும். அந்த அடிப்படையில் சிறைவாசிகளின் எஞ்சிய கால வாழ்வில் வசந்தம் ஏற்படவும், அவர்களது குடும்பங்களில் மறுமலர்ச்சி ஏற்படவும் முதல்-அமைச்சர் கருணை உள்ளத்தோடு நல்லதொரு அறிவிப்பை வெளியிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்