மாவட்ட செய்திகள்

தா.பழூர் ஒன்றியத்தில் ஏரி, குளங்களில் எச்சரிக்கை பலகை

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்கும் பணி கடந்தாண்டு நடைபெற்று வந்தது.

தினத்தந்தி

ஜெயங்கொண்டம்,

தூர்வாரப்பட்ட அனைத்து ஏரி, குளங்களில் அண்மையில் பெய்த மழையில் நீர்வரத்து அதிகமாகி தண்ணீர் அதிகமாக தேங்கி உள்ளது. இதையடுத்து அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவின்பேரில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், நன்கு ஆழமுள்ள ஏரி, குளங்களை தேர்வு செய்து, பொதுமக்களுக்கு எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்சரிக்கை பலகை அமைக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி, ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 40 ஏரி, குளங்களில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள ஏரி, குளங்களில் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் கோடாலிகருப்பூர் ஏரியை ஆய்வு செய்தார். இதில் ஊராட்சி செயலாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு