மாவட்ட செய்திகள்

மும்பை டியூசன் மையத்தில் ஆசிரியை கொலை - ஊழியர் கைது

மும்பை கோரேகாவில் உள்ள டியூசன் மையத்தில் ஆசிரியை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை காட்கோபர் ராய்காட் சவுக் பகுதியில் உள்ள சிவ்சக்தி அடுக்குமாடி கட்டிடத்தில் மயங்க் டுடோரியல் செயல்பட்டு வருகிறது. இந்த டியூசன் மையத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் மயங்க் மண்டோப் (வயது 35). இந்த மையத்தில் கடந்த 2 மாதங்களாக கணேஷ் பவார் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில், மயங்க் மண்டோப் நேற்று வழக்கம்போல பணிக்கு வந்திருந்தார். இதில், மாலை 6.30 மணியளவில் அங்கு வந்த கணேஷ் பவார், கூர்மையான ஆயுதத்தால் திடீரென டியூசன் ஆசிரியை மயங்க் மண்டோபை குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், மயங்க் மண்டோப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை கத்தியால் குத்திக்கொலை செய்த கணேஷ் பவாரை கைது செய்தனர்.

என்ன காரணத்துக்காக அவர் டியூசன் ஆசிரியையை கொலை செய்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்