மாவட்ட செய்திகள்

கல்லூரி படிக்க வைக்க தாயிடம் பணம் இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கல்லூரி படிக்க வைக்க தாயிடம் பணம் இல்லாததால், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாவணகெரே அருகே நடந்து உள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு:

கல்லூரி படிக்க....

தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா உஜ்ஜப்பா வதேரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜப்பா. இவரது மனைவி சந்திரம்மா. இந்த தம்பதியின் மகள் ரக்சிதா (வயது 18). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தாலாவுக்கு கூலி வேலைக்கு சென்ற நாகராஜப்பா, மின்சாரம் தாக்கி இறந்து விட்டார். இதனால் சந்திரம்மா வீட்டு வேலை செய்து ரக்சிதாவை படிக்க வைத்தார்.

தாவணகெரேயில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி. படித்து முடித்த ரக்சிதா, கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினார். இதுகுறித்து அவர் சந்திரம்மாவிடம் கூறியுள்ளார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக எனக்கு சரியாக வேலை இல்லை. இதனால் என்னால் கல்லூரி படிக்க வைக்க முடியாது. கல்லூரி படிக்க வைக்க பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதன்காரணமாக மனம் உடைந்து காணப்பட்ட ரக்சிதா நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த பிளிசோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரக்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கல்லூரி படிக்க வைக்க தாயிடம் பணம் இல்லாததால், ரக்சிதா தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் பிளிசோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் உஜ்ஜப்பா வதேரஹள்ளி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை