மாவட்ட செய்திகள்

சென்னை பெரம்பூரில் குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை பெரம்பூரை அடுத்த செம்பியம் சுப்பிரமணி தெருவில் வசித்து வருபவர் உமாபதி. சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

தினத்தந்தி

இவருடைய மனைவி காயத்ரி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. 1 வயதில் அஷ்வர்தினி என்ற பெண் குழந்தை உள்ளது. பெரம்பூரில் மாமியார் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த காயத்ரி, ஒரு

வருடத்துக்கு முன்பு தனது கணவருடன் வாடகைக்கு வீடு எடுத்து தனி குடித்தனம் சென்றுவிட்டார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த காயத்ரி, நேற்று முன்தினம் இரவு படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் காயத்ரிக்கு திருமணம் ஆகி 3 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு