மாவட்ட செய்திகள்

கோவில் பிரசாதம் சாப்பிட்ட வாலிபர் மர்ம சாவு - மருத்துவமனையில் மனைவி அனுமதி

எம்.கே.பி. நகரில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மனைவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரம்பூர்,

சென்னை காசிமேடு ஜி.என்.செட்டி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 34). இவரது மனைவி சரண்யா(29). இருவரும் நேற்று வியாசர்பாடி எம்.கே.பி நகரில் மோட்டார்சைக்கிளில் சென்றபோது திடீரென மயங்கி விழுந்தனர். எம்.கே.பி.நகர் போலீசார், இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிகிச்சைக்கு பிறகு சரண்யாவிடம் போலீசார் விசாரித்தனர். அதில், கணவன்-மனைவி இருவரும் அரசு வேலை பெறுவதற்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு எம்.கே.பி நகரை சேர்ந்த ஒருவரிடம் ரூ.3 லட்சம் கொடுத்தனர். ஆனால் அந்த நபர் வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி கொடுக் காமல் இருந்து வந்தார்.

நேற்று அந்த நபர், அரசு வேலைக்கான பணி நியமன ஆணை வந்துள்ளதாக கூறியதால் அதை வாங்க வந்தனர். அப்போது அவர், கணவன்-மனைவியிடம் கோவில் பிரசாதம் என கூறி கொடுத்தார். அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு செல்லும்போது மயங்கி விழுந்ததாகவும், கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபர் உண்மையிலேயே பிரசாதத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் கார்த்திக் உயிரிழந்தாரா? அல்லது சரண்யா நாடகம் ஆடுகிறாரா? என விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்