மாவட்ட செய்திகள்

4 இடங்களில் பயன்பாட்டுக்கு வந்த தற்காலிக காய்கறி மார்க்கெட்

திண்டுக்கல்லில், 4 இடங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. காய்கறிகளின் விலை கூடுதலாக இருந்ததால் பொதுமக்களிடம் வரவேற்பை பெறவில்லை.

தினத்தந்தி

திண்டுக்கல்:

காந்தி மார்க்கெட்

ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் திண்டுக்கல்லில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி திண்டுக்கல் காந்திமார்க்கெட்டில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மார்க்கெட்டை திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் பகுதிக்கு கடந்த 17-ந்தேதி மாற்றியது.

ஆனால் அங்கும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஏராளமானோர் குவிந்தனர். இதையடுத்து திண்டுக்கல் நகரின் முக்கிய இடங்களில் காந்தி மார்க்கெட்டை பிரித்து அமைக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.

பயன்பாட்டுக்கு வந்தன

அதன்படி திண்டுக்கல் நாகல்நகர் சந்தை பகுதி, பழனி ரோட்டில் உள்ள லாரிபேட்டை அருகில், திண்டுக்கல் பஸ் நிலையம், ஐ.டி.ஐ. வளாகம் ஆகிய 4 இடங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகள் அமைக்கப்பட்டது.

அங்கு காய்கறிகளை விற்பனை செய்பவர்கள் சமூக இடைவெளியில் அமர்ந்து வியாபாரம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்று முதல் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகள் பயன்பாட்டுக்கு வந்தன.

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட காய்கறி மார்க்கெட்டில் நேற்று குறைந்த எண்ணிக்கையில் தான் பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.

வரவேற்பு இல்லை

இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்ட போது, பழனி சாலையில் அமைக்கப்பட்டுள்ள காந்தி மார்க்கெட்டை விட இங்கு காய்கறிகளின் விலை குறைந்த பட்சம் ரூ.10 முதல் ரூ.15 வரை கூடுதலாக உள்ளது.

அதாவது பழனி சாலையில் உள்ள மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.15-க்கு கிடைக்கிறது. ஆனால் இங்கு ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் ஒரு கிலோ கேரட் ரூ.40-க்கும், பீன்ஸ் ரூ.45-க்கும், உருளை ரூ.35-க்கும், சின்ன வெங்காயம் ரூ.50-க்கும், பெரிய வெங்காயம் ரூ.35-க்கும், முட்டைக்கோஸ் ரூ.25-க்கும் விற்கப்பட்டது.

விலை குறைவாக கிடைக்கும் என்ற காரணத்தினால் தான் மார்க்கெட்டுக்கு வருகிறோம்.

ஆனால் மார்க்கெட்டிலேயே கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்கப்பட்டால் வரவேற்பு எப்படி கிடைக்கும் என்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது