தாராபுரம்,
தாராபுரம், காங்கேயம், வெள்ளகோவிலில் 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. தாராபுரத்தில் சிகிச்சை பலனின்றி 3பேர் பலியானார்கள்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலை தீவிரம் அடைந்துள்ளது.அதன்படி தாராபுரத்தில் கடந்த 3 நாட்களில் 700 பேருக்கு கோரோனா பாசோதனை செய்ததில் 60 பெருக்கு தொற்று உறுதியானது. அவாகள் அனைவரும் தாராபுரம் அரசு ஆஸ்பத்தி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூ மருத்துவமனை, திருப்பூ அரசு மருத்துவகல்லூ மருத்துவமனை, கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா. இந்த நிலையில் கொரோனா சிகிச்சை பலனின்றி தாராபுரம் காந்திபுரம் தெற்கு தெருவை சோந்த 64 வயது முதியவர், மங்கலாம்பாளையம் பகுதியை சோந்த 75 வயது மூதாட்டி , குலுக்கபாளையத்தை சோந்த 45 வயது ஆண் ஆகிய 3பேரும் உயிழந்தனா.
தாராபுரம் பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவாகளின் எண்ணிக்கை வேகமாக அதிகாத்து வரும் நிலையில் பொதுமக்கள் பீதியில் உள்ளனா.
காங்கேயம்
மேலும் காங்கேயத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள், தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு, காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் காங்கேயம் தேர்தல் நடத்தும் அலுவலர் ரங்கராஜன் தலைமையில் நேற்று கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் முரளி முன்னிலையில் 258 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் பரிசோதனையின் முடிவுகள் இன்று (வியாழக்கிழமை)வெளிவரவுள்ளது. மேலும், மீதமுள்ள வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள், தேர்தல் பணியாளர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
வெள்ளகோவில்
வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில். கடந்த 2 தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நோயாளிகளின் விருப்பத்திற்கேற்ப திருப்பூர், கோவை, கரூர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.