மாவட்ட செய்திகள்

சிறுமியை கற்பழித்த வளர்ப்பு தந்தைக்கு 20 ஆண்டு ஜெயில்

சிறுமியை கற்பழித்த வளர்ப்பு தந்தைக்கு 20 ஆண்டு ஜெயில் விதிக்கப்பட்டது.

மும்பை,

மும்பை கப் பரடே பகுதியில் 12 வயது சிறுமி தாய் மற்றும் வளர்ப்பு தந்தையுடன் வசித்து வந்தாள். இதில், கடந்த 2012-ம் ஆண்டு வளர்ப்பு தந்தை, 12 வயது சிறுமியை கற்பழித்தார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறினாள். ஆனால் தாய் அவளை நம்பவில்லை. இதனால் விரக்தி அடைந்த சிறுமி பினாயிலை குடித்து தற்கொலை செய்ய முயன்றாள்.

இந்த நிலையில் சிறுமி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது, தனக்கு நடந்த அவலம் குறித்து நர்ஸ் ஒருவரிடம் கூறினாள்.

இதுகுறித்து நர்சு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கற்பழித்த வளர்ப்பு தந்தையை கைது செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில், வழக்கை விசாரித்த கோர்ட்டு மகளை கற்பழித்த வளர்ப்பு தந்தைக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்