மாவட்ட செய்திகள்

செங்கம் அருகே அரசு பஸ் மரத்தில் மோதி விபத்து

செங்கம் அருகே அரசு பஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

தினத்தந்தி

செங்கம்,

பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை சந்திரகுமார் (வயது 48) என்பவர் ஓட்டினார். பஸ் செங்கத்தை அடுத்த மேல்புழுதியூர் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது வேடங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ரமணன் என்பவர் மோட்டார் சைக்கிளில் சாலையின் நடுவில் சென்று கொண்டிருந்தார். மோட்டார்சைக்கிள் மீது மோதாமல் செல்ல அரசு பஸ்சை டிரைவர் சாலையின் இடதுபக்கமாக திருப்பினார்.

இதில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் சாலையின் ஓரமாக இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் சந்திரகுமார் மற்றும் சிந்து, கீர்த்தனா ஆகிய 2 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்த 3 பேரையும் செங்கம் போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது