உத்தமபாளையம்,
தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையது கான் போட்டியிடுகிறார்.கடந்த சில தினங்களாக திறந்த வேனில் நின்றவாறு வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.சின்னமனூர் ஒன்றியப் பகுதியான வேப்பம்பட்டி, சீப்பாலக்கோட்டை, காமாட்சிபுரம், ஓடை பட்டி, வெள்ளையம்மாள்புரம், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், சின்ன ஓவுலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார்.
வேட்பாளர் சையதுகானை பெண்கள் மலர்தூவி வரவேற்றனர்.அப்போது பொதுமக்கள் மத்தியில் வேட்பாளர் பேசியதாவது:-
முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் நமது தொகுதி அளவில் கம்பம், உத்தமபாளையம், தேவாரம் பகுதிகளில் பாசன வசதி பெறுகிறது. அதே நேரத்தில் சின்னமனூர் ஒன்றிய கிழக்குப் பகுதிகளில் பாசன வசதி பெறவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் இந்தப் பகுதியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தொட்டம் மான் துறைகால்வாய் திட்டத்தை செயல்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் உத்தரவுப்படி கால்வாய் திட்டத்தை தொடங்குவதற்கு ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. விரை வில் பணி தொடங்க உள்ளது.
ஓடைப்பட்டி பேரூ ராட்சி பகுதிக்கு உத்தமபாளையம் மற்றும் சின்னமனூர் முல்லைப் பெரியாற்றில் இருந்து உறை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப் பட்டு வருகிறது. பூமிக்கடியில் பதிக் கப்பட்ட குழாய்கள் சேதம் அடைந்து முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். புதிய குழாய் அமைக்கப்பட்டு தினந்தோறும் குடிநீர் வினி யோகம் செய்ய நடவடிக்கை எடுப்பேன்.
பின்னர் தேவாரம், பண்ணைப்புரம் ஆகிய பேரூராட்சி பகுதியில் பிர சாரம் செய்தார். அப்போது தேவாரம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாக்குலூத்து மெட்டு சாலை திட்டத்தில் கேரள மாநிலத்தை இணைக்கும் பகுதியில் 4.கிலோமீட்டர் தூரத்தில் சாலை அமைக் கப்பட உள்ளது. சாலை அமைப்பதற்காக நமது தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பாராளுமன்ற கூட்டத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதுமட்டுமின்றி சாலை முறையாக அமைக்க சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியை சந்தித்து வலியுறுத்தி உள்ளார். எனவே விறைவாக பணி தொடங்க உள்ளது.
தொடர்ந்து உத்தமபாளை யம் ஊராட்சி ஒன்றியப் பகுதியான ராமசாமி நாயக் கன்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, நாகைய கவுண்டன்பட்டியில் திறந்த வேனில் நின்றவாறு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, 5 கிராம மக்களும் பயன்பெறும் வகையில் ராயப்பன்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு ஆவின் பாலகம் அமைக்கப்படும்.
ராயப்பன்பட்டி பொறுத்த வரையில் மூன்று மேல்நிலைப் பள்ளிகளை கொண்டுள்ளது.வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களின் வசதிக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக் கப்படும். சண்முகநாதர் கோவிலுக்கு பக்தர்கள் சென்றுவர ராயப்பன்பட்டி வரட்டாறுபகுதியில் புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். நாகையகவுண் டன் பட்டியில் தேசிய மயமாக் கப்பட்ட வங்கி தொடங்க நடவடிக்கை எடுப்பேன். ஆனைமலை பட்டியில் அதிக அளவில் திராட்சை தோட்ட தொழிலாளர்கள் உள்ளனர் அவர்களின் நலன் காக்கும் வகையில் நல வாரியம் அமைக்கப்படும். கோகிலாபுரம் கிராமத்திற்குள் பஸ்கள் சென்று வர சிரமம் உள்ளது என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.அந்தக் கோரிக்கையை ஏற்று புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமசாமி நாயக்கன் பட்டிக்கு கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கிராமப்புற பெண் களுக்கு மகளிர் குழுக்கள் மூலம் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுத்தர நட வடிக்கை எடுப்பேன்.இவ் வாறு பேசினார். முன்னதாக அனைத்து ஊர்களிலும் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் பிரசாரத்தில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன்,உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர் அழகு ராஜா, கம்பம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவக்குமார், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.