மாவட்ட செய்திகள்

கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி(வயது 30). இளம்பிள்ளை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பகுதிநேர ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

தர்மபுரி,

இவருக்கும், தர்மபுரி மாவட்டம் ஜருகுவை சேர்ந்த ராமமூர்த்தி(32) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவரின் குடும்பத்தினர் ஜான்சிராணியை தரக்குறைவாக பேசியும், வரதட்சணை கேட்டும் கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஜான்சிராணி தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கணவர் ராமமூர்த்தி, மாமியார் பத்மாவதி, மாமனார் கிருஷ்ணன் உள்பட குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்