மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் தூர கட்டுப்பாடு விதி செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு

டாஸ்மாக் கடைகள் தொடர்பான தூரக் கட்டுப்பாட்டு விதி செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கு குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

மதுரை,

தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து மதுபான கடைகளை அரசே நடத்தி வருகிறது. மதுபான விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. மது குடிப்பதால் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். இதனால் மாநிலத்தில் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் தலை தூக்கியுள்ளன.

இந்தநிலையில் மது விற்பனை தொடர்பான விதியில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்களில் இருந்து மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 50 மீட்டர் தொலைவிற்கு உள்ளாகவும், மற்ற பகுதி களில் 100 மீட்டர் தொலைவிற்கு உள்ளாகவும் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

சட்டவிரோதம்

ஆனால் டாஸ்மாக் கடைகள் திறந்த பின்னர் அந்த தூரத்துக்குள் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் புதிதாக வந்தால் இந்த விதி பொருந்தாது என்றும் அந்த விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். எனவே மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான தூர கட்டுப்பாடு விதியை செல்லாது என அறிவித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

தலைமை செயலாளருக்கு உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் இந்த மனு குறித்து தமிழக தலைமை செயலாளர், மது விலக்கு ஆயத்தீர்வை முதன்மை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது