மாவட்ட செய்திகள்

பேரம்பாக்கம் அருகே தனியார் நிறுவன ஊழியர்களை வெட்டிய 8 பேர் மீது வழக்கு

தனியார் நிறுவன ஊழியர்களை வெட்டிய 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர்,

பேரம்பாக்கம் அருகே உள்ள மப்பேடு மேட்டுக்காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சென்னையை சேர்ந்த சந்திரசேகரன் (வயது 46) மேலாளராக உள்ளார். நேற்றுமுன்தினம் சந்திரசேகரன் நிறுவனத்தின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மப்பேடு மேட்டுக்காலனியை சேர்ந்த சந்திரசேகர், தேவா, ரமேஷ், முத்தீஷ், சின்னா, திவாகர், சத்யராஜ், பிரசாந்த் ஆகியோர் அந்த நிறுவனத்தின் காண்டிராக்டை மாற்றி தருமாறு கூறி சந்திரசேகரனிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சந்திரசேகரன் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் கிளமென்ட், அசோக் டான்ஜன், விக்டர்ஜான், பாக்கியநாதன், ஈஸ்டர் ஜான் ஆகியோரை தகாத வார்த்தையால் பேசி கையாலும் இரும்பு கம்பியாலும் தாக்கினர். மேலும் அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் 6 பேரையும் வெட்டி விட்டு அந்த நிறுவனத்தின் பாதுகாவலர் அறையை சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இதில் காயம் அடைந்த சந்திரசேகரன் உள்பட 6 பேரும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சந்திரசேகரன் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சந்திரசேகர், தேவா, ரமேஷ், முத்தீஷ், சின்னா, திவாகர், சத்யராஜ், பிரசாந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு