மதுரை,
அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் கிரம்மர் சுரேஷ் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து சுயேச்சையாக போட்டியிட மதுரை மத்திய தொகுதி தேர்தல் அதிகரி கோட்டூர் சாமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இது குறித்து அவர் கூறும் போது, நான் மத்திய தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்தும் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. கட்சியில் உண்மையாக உழைப்பவர்களை அடையாளம் கண்டு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆகவே தான் நான் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்களின் மனசாட்சியாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று கூறினார்.