ஏரியூர்,
இவர் நேற்று மாலை மொபட்டில் கடைவீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார்சைக்கிளில் காமராஜ்பேட்டையைச் சேர்ந்த மாயக்கண்ணன் (37) என்பவர் வந்தார். திடீரென மொபட்டும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கிருஷ்ணனும், மாயக்கண்ணனும் படுகாயம் அடைந்தனர். அப்போது மாயக்கண்ணனுக்கு பின்னால் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த பூசாரி நந்தகுமார் (43) என்பவர் மாயக்கண்ணனின் மோட்டார்சைக்கிளில் மோதினார். இதில் நந்தகுமார் மற்றும் அந்த வழியாக நடந்து சென்ற கலா (30) ஆகியோரும் காயம் அடைந்தனர்.