மாவட்ட செய்திகள்

கொள்ளிடம் அருகே தீயில் எரிந்து குடிசை வீடு நாசம்

கொள்ளிடம் அருகே தீயில் எரிந்து குடிசை வீடு நாசம்.

தினத்தந்தி

கொள்ளிடம்,

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் ஊராட்சி மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மனைவி ருக்மணி (வயது65). இந்தநிலையில் நேற்று இவரது குடிசை வீடு மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் எரிந்து நாசமானது. தகவலறிந்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தாசில்தார் சண்முகம், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 ஆயிரமும், அரசு நிதியாக ரூ.5 ஆயிரமும் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு