மாவட்ட செய்திகள்

அந்தியூர் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு

அந்தியூர் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.

அந்தியூர்,

அந்தியூர் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

அந்தியூர் வெள்ளபிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 55). சலவைத்தொழிலாளி. இவருடைய மனைவி தேவகி (47). இவர்களுக்கு ஞானசேகரன் (17), மனோஜ்குமார் (13) என்ற 2 மகன்கள் உள்ளனர். பெரியசாமி தினமும் அந்தியூர் அருகே உள்ள பெரிய ஏரிக்கு மற்ற தொழிலாளிகளுடன் துணி துவைக்க செல்வார். அதன்படி நேற்று காலை அவர் ஏரிக்கு துணிகள் துவைப்பதற்காக சென்றார்.

அங்கு அவர் துணி துவைத்துக்கொண்டு இருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக ஏரியில் தவறி விழுந்து விட்டார். இதில் அவருக்கு நீச்சல் தெரியாததால் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினார்.

இதனை கவனித்த மற்ற தொழிலாளர்கள் மற்றும் அங்கு குளித்து கொண்டு இருந்தவர்கள் விரைந்து சென்று, பெரியசாமியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பெரியசாமியின் உடலை ஏரியில் இருந்து மீட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு