மாவட்ட செய்திகள்

வாகனங்களில் காய்கறிகள் கொண்டுசெல்ல அனுமதி மறுப்பு ஆரணி மார்க்கெட்டில் 2-வது நாளாக கடையடைப்பு

ஆரணி காய்கறி மார்க்கெட்டுக்கு வாகனங்களில் காய்கறிகளை கொண்டு செல்ல அனுமதிக்காததால் நேற்று 2-வது நாளாக காய்கறி கடைகள் திறக்கப்படவில்லை. சில்லரை வியாபாரிகள் உழவர்சந்தையில் காய்கறிகளை வாங்கி அதிகவிலைக்கு விற்றனர்.

ஆரணி,

ஆரணியில் கடந்த மாதம் காந்திரோடு, மார்க்கெட் ரோடு, காய்கறி மார்க்கெட், புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. புதிய பஸ் நிலையத்திற்குள் வாகனங்களை நிறுத்தி காய்கறிகளை இறக்க தடைவிதிக்கப்பட்டது.

இதனால் காய்கறி மொத்த வியாபாரிகள் கோட்டை மைதானம் அருகே ரோட்டிலேயே லாரிகளை நிறுத்தி காய்கறிகளை இறக்கினர். அவர்களுக்கு தனியாக இடம் ஒதுக்காததால் நேற்று முன்தினம் அதிகாலையில் காய்கறி ஏற்றிவந்த லாரிகளை பஸ் நிலையத்தின் முன்பு நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீசார் 55 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று லாரிகளில் கொண்டுவரப்பட்ட காய்கறிகளை வேறுபகுதிகளில் இருந்து சிறிய வாகனங்களில் ஏற்றி மார்க்கெட்டுக்கு கொண்டுசெல்லவும் அனுமதிக்கவில்லை. இதனால் லாரிகளில் கொண்டுவரப்பட்ட காய்கறிகளை இறக்காமல் கொண்டுசென்றுவிட்டனர்.

இதன் காரணமாக நேற்று ஆரணி மார்க்கெட்டில் 2-வது நாளாக கடைகள் திறக்கப்படவில்லை. காய்கறி கடைகள் திறக்கப்படாததால், சில்லரை வியாபாரிகள், உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்கி அதை அதிகவிலைக்கு விற்றனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

லாரிகளை நிறுத்தி காய்கறிகளை ஏற்றி இறக்க இடம் ஒதுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மொத்த வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்