மாவட்ட செய்திகள்

நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை பின்பற்றக்கோரி திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

நீதித்துறையில் இடஒதுக்கீட்டை பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரை சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளில் நீதிபதிகளாக நியமனம் செய்ய வேண்டும், நீதித்துறையில் இடஒதுக்கீட்டை பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். நகர இளைஞரணி தலைவர் மகேஷ் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணேஸ்வரி, நகர அமைப்பாளர் நல்லபெருமாள், பகுத்தறிவாளர் கழக தலைவர் சிவதாணு உள்பட பலர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக இளைஞரணி நெல்லை மண்டல செயலாளர் வெற்றிவேந்தன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து உள்பட பலர் சிறப்புரையாற்றினர். ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்