மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை காவிரி ஆற்றில் புதைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

திருச்சி,

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை காவிரி ஆற்றில் புதைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகில் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் கூடி நின்றனர். குடியுரிமை திருத்த மசோதாவை புறக்கணிப்போம் என்ற பெயரில் ஒரு கருப்பு நிற பொம்மையை தூக்கிக்கொண்டு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து காவிரி கரைக்கு ஊர்வலமாக செல்லும் திட்டத்தை கைவிட்டு, கட்சியின் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவை தேவை இல்லை, அவற்றை திணிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் நீளமான பதாகை ஒன்றை பிடித்து இருந்தனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராகிம்ஷா, ஒருங்கிணைப்பாளர்கள் மொய்தீன், சம்சுதீன், ஜெய்னுலாப்தீன் உள்பட பலர் பேசினார்கள்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு