திறந்த ஜீப்பில் மக்களிடம் வாக்கு சேகரித்த அர.சக்கரபாணி 
மாவட்ட செய்திகள்

தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஒட்டன்சத்திரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அர.சக்கரபாணி உறுதி

தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஒட்டன்சத்திரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அர.சக்கரபாணி உறுதி

தினத்தந்தி

ஒட்டன்சத்திரம்,

தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் ஒட்டன்சத்திரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் கலை கல்லூரி அமைக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது அர.சக்கரபாணி எம்.எல்.ஏ உறுதியளித்தார்.

நன்றி தெரிவித்தார்

ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட ரங்கநாதபுரம், லக்கயங்கோட்டை, காலனி, குமாரசாமிகவுண்டன்புதூர், கே.அத்திக் கோம்பை, சாலைப்புதூர், கண்ணப்பன்நகர், சத்திய நாதபுரம், பழையகாளாஞ்சி, பெயில் நாயக்கன்பட்டி, புதுகளஞ்சிபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ வாக்கு சேகரித்து பேசுகையில், தொடர்ந்து என்னை ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த பொதுமக்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன், கடந்த கால தி.மு.க. ஆட்சியில் ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத் திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.

மருத்துவக்கல்லூரி

ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ரூ.530 கோடி செல-வில் திட்டம் தயார் செய்யப்பட்டு திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. தி.மு.க .ஆட்சிக்கு வந்தவுடன் வேலைகள் தொடங்கப்படும் என்றார், மகளிருக்கு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்றும் மகளிருக்கு வேலை வாய்ப்பில் 40 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் நத்தம், ஆத்தூர், தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் அரசு கல்லூரி தொடங்கப்படும் என்றும் கொத்தையத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும், ஒட்டன்சத்திரத்தில் அரசு மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் தொழில்பேட்டை தொடங்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு தேவையான இடங்களில் தடுப்பணை கட்டப்படும் என்றும் பொது மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

அர.சக்கரபாணி பிரசாரத்தின் போது பெண்கள் ஆரத்தி எடுத்தபோது எடுத்தபடம்

தொடர்ந்து என்னை ஆறாவது முறையாக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் பிரசாரத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி, தி.மு.க. நகர செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், தங்கராஜ், சுப்பிரமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது