மாவட்ட செய்திகள்

குலமாணிக்கம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குலமாணிக்கம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலின் திருவிழா நடைபெற்றது.

தினத்தந்தி

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குலமாணிக்கம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலின் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு குதிரை வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி முத்துமாரியம்மனுக்கு பால், பழம், பஞ்சாமிர்தம், இளநீர், தயிர் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மனை எழுந்தருள செய்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை