மாவட்ட செய்திகள்

நாசிக் திரிம்பகேஷ்வர் கோவில் அருகே குவியலாக துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்ததால் பரபரப்பு

திரிம்பகேஷ்வர் கோவில் அருகே குவியலாக கிடந்த துப்பாக்கி தோட்டாக்களை போலீ சார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

நாசிக்,

நாசிக் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற திரிம்பகேஷ்வர் கோவில் அருகே நசார்தி ஆற்றுப்பாலம் உள்ளது. நேற்று முன்தினம் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நசார்தி ஆற்றுப்பாலத்தின் அடியில் குவியலாக வெடிபொருட்கள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் சத்பூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அங்கு கிடந்த 113 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் சிதறி கிடந்த 41 காலி தோட்டாக்களை கைப் பற்றினர்.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் சோதனை நடத்தியதில், ஒரு பாலித்தீன் பையில் இருந்த மேலும் 99 துப்பாக்கி தோட்டாக்களும், 15 காலி தோட்டாக்களும் இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர்.

இவை அனைத்தும் ஏ.கே.47 மற்றும் 303 ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தக்கூடிய தோட் டாக்கள் என்பது தெரியவந்தது.

திரிம்பகேஷ்வர் கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் திரிம்பகேஷ்வர் கோவில் நாட்டின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்த நிலையில் பிரசித்தி பெற்ற அந்த கோவில் அருகே குவியலாக துப்பாக்கி தோட்டாக்கள் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் துப்பாக்கி தோட்டாக்களை போட்டு சென்றது யார்?, என்பதை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது