மாவட்ட செய்திகள்

வத்தலக்குண்டு தங்கும் விடுதியில் அழுகிய நிலையில் சமையல்காரர் உடல்

வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சமையல்காரர் உடல் அழுகியநிலையில் கிடந்தது.

தினத்தந்தி

வத்தலக்குண்டு,

தாண்டிக்குடி மலைப்பகுதியான பெரும்பாறையில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல்காரராக வேலை பார்த்தவர் முருகன் (வயது 53). இவரது குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மருதன்வலசில் வசித்து வருகிறார்கள். இவர் 15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை ஊருக்கு சென்று வருவது வழக்கம். இவர் பொங்கலுக்கு ஊருக்கு வருவதாக சொல்லியிருந்தார். ஆனால் அங்கு அவர் போகவில்லை. எனவே குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து அவரை செல்போனில் தொடர்பு கொண்டனர் ஆனால் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதி மேலாளர் போலீசில் ஒரு புகார் தெரிவித்தார். அதில் முருகன் என்பவர் கடந்த 17-ந்தேதி முதல் அறை எடுத்து தங்கியிருந்ததாகவும், அறையின் உள்புறம் பூட்டப்பட்டு இருப்பதாகவும், ஜன்னல் வழியே துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விடுதிக்கு விரைந்து அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு முற்றிலும் அழுகிய நிலையில் முருகன் பிணமாக கிடந்தார். அங்கு கிடைத்த செல்போன் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது