மாவட்ட செய்திகள்

தொழிலாளர்களை அழைத்து வந்த கர்நாடக அரசு பஸ் பள்ளத்தில் இறங்கியது

தொழிலாளர்களை அழைத்து வந்த கர்நாடக அரசு பஸ் பள்ளத்தில் இறங்கியது 30 பேர் உயிர் தப்பினர்.

தினத்தந்தி

வாழப்பாடி,

பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள கல்வராயன் மலை கிராமங்களுக்கு கர்நாடக மாநில அரசு பஸ்சில் 30 தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். நேற்று மதியம் 12 மணி அளவில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி பிரிவு சாலை அருகே பஸ் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் வந்த 30 பேர் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார், விபத்து நடந்த இடத்துக்கு சென்று, பஸ்சில் சிக்கி இருந்த தொழிலாளர்களை மீட்டனர். பின்னர் அவர்களை மற்றொரு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் பாலன் (வயது 37) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கிரேன் மூலம் பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கிய பஸ் மீட்கப்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு