வண்டலூர்,
கூட்டத்திற்கு காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துசுந்தரம், வி.டி.லீமாரோஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் குமார், வட்டார செயலாளர் ரமேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாவட்ட செயலாளர் குணசேகரன் கலந்துகொண்டு பேசினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக நடை மேம்பாலம் அமைக்க மாவட்ட கலெக்டரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்களுக்கு நீண்ட நாட்களாக ஊதியம் அதிகரிக்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், 3 ஆண்டு காலமாக நடைபெறாமல் உள்ள உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி இருக்கை பிரிவிற்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் இணையதளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்ய தனியாக ஒரு கணினி உதவியாளரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வட்டார துணைத்தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார்.