மாவட்ட செய்திகள்

வாலிபரை அரிவாளால் வெட்டியவர் கைது

வாலிபரை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையை சேர்ந்தவர்கள் ஜெயராஜ் மகன் சின்னப்பன் (வயது 22), மிக்கேல் அமிர்தமணி மகன் விஜய் அன்பரசு (23). கூலி தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இவர்கள் முக்கூடலில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றபோது, அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இலந்தகுளம் வடக்கு தெருவைச் சேர்ந்த அல்போன்ஸ் மகன் அற்புத சகாயடைசன் (24), இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டியதுதானே என்று கூறினார்.

பின்னர் அற்புத சகாயடைசன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்ற சின்னப்பன், விஜய் அன்பரசு ஆகிய 2 பேரும் அரிவாளால் அற்புத சகாயடைசனை வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னப்பனை கைது செய்தனர். தலைமறைவான விஜய் அன்பரசை வலைவீசி தேடி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு