கபிஸ்தலம்,
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள மேட்டுத்தெரு- இளங்கார்குடி கிராமத்தை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் ரூ.5 கோடி மதிப்பில் அங்கு புதிய பாலம் கட்டப்பட உள்ளது. புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் சிவக்குமார் வரவேற்றார். ரெங்கசாமி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபிநாதன், ஒப்பந்தக்காரர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அடிக்கல்
விழாவில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக் கண்ணு கலந்து கொண்டு புதிய பாலத்துக்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜைகளை செய்தார். இதில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஹாஜாசெரீப், அ.தி.மு.க. ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜாகீர் உசேன், முன்னாள் கவுன்சிலர்கள் திவாகர், முருகன், பிரேம்நாத், சங்கர், கூட்டுறவு சங்க தலைவர்கள் ராஜேந்திரன், சின்னப்பா, மருதை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ஊராட்சி துணை தலைவர் தேவேந்திரன் நன்றி கூறினார்.