மாவட்ட செய்திகள்

சிலந்தியைக் கொல்ல வீட்டைக் கொளுத்திய நபர்!

‘மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்திய கதை’ என்பார்கள். அதைப் போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கிறார். அவரது வீட்டில் மிகப்பெரிய சிலந்திப் பூச்சி இருந்தது. அந்நபர் அதை அடித்துக் கொல்ல முயன்றார். அது தப்பித்துக் கொண்டே இருந்தது. எனவே மிகப்பெரிய பர்னர் மூலம் தீயிட்டுக் கொல்ல முயன்றார்.

அப்போது, வீட்டில் இருந்த திரைச்சீலையில் தீப்பிடித்து பொருட்கள் மீதும் பரவியது. பின்னர் தீ வீடு முழுவதும் எரிந்தது. உடனே தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்துவந்து தீயை போராடி அணைத்தனர். முன்னதாக அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிலந்திக்காக வீட்டைக் கொளுத்திய நபருக்கு நல்ல பாராட்டு கிடைத்திருக்கும்!

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு