மாவட்ட செய்திகள்

கொடுங்காவயல் புனித வனத்து சின்னப்பர் ஆலய சப்பர பவனி

தேவகோட்டை அருகே உள்ள கொடுங்காவயல் புனித வனத்து சின்னப்பர் ஆலய சப்பர பவனி நடைபெற்றது.

தேவகோட்டை,

தேவகோட்டையை அடுத்த புளியால் அருகே உள்ள கொடுங்காவயல் புனித வனத்து சின்னப்பர் ஆலய திருவிழா நடந்தது. விழாவையொட்டி தினமும் மாலை சிறப்பு வழிபாடு, மறையுரை, திருப்பலி நடைபெற்றது..சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் சிவகங்கை மறை மாவட்ட அருட்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் அருட்தந்தையர்கள் திருப்பலியை நிறைவேற்றினர்.

தொடர்ந்து மின்னொளியில் சப்பர பவனி நடைபெற்றது. முதலில் வந்த சப்பரத்தில் புனித வனத்து சின்னப்பரும், தொடர்ந்து 2வதாக புனித அந்தோணியாரும், 3வதாக மாதாவும் சப்பரத்தில் வலம் வந்தனர். திருவிழா நிறைவாக திருப்பலி நடைபெற்று கொடியிறக்கம் செய்யப்பட்டது.

நேர்த்திக்கடன்

விழாவையொட்டி புனித அருளானந்தர் நாடகம் நடைபெற்றது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஏராளமான ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை புளியால் பங்குத்தந்தை ஜேம்ஸ், உதவி பங்குத் தந்தை பிரிட்டோபிரபு, ஓய்வுபெற்ற தாசில்தார் மரியதாஸ் மற்றும் கொடுங்காவயல் கிராம இளைஞர், மகளிர் மன்றங்கள், இறைமக்கள் செய்திருந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்