மாவட்ட செய்திகள்

திட்டச்சேரி பகுதியில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றம்

திட்டச்சேரி பகுதியில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.

தினத்தந்தி

திட்டச்சேரி,

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி சாலை ஓரங்களில் உள்ள அரசியல் கட்சிகள் கொடிக்கம்பங்கள் மற்றும் கொடி மேடைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திட்டச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை திட்டச்சேரி பேரூராட்சி உதவி இயக்குனர் நெடுஞ்செழியன் முன்னிலையில் பொக்லின் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து வாணியன் தெரு, தைக்கால் தெரு, திட்டச்சேரி பஸ் நிலையம், வெள்ளத்திடல், ஆற்றங்கரை தெரு, கொந்தகை, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிச்கம்பங்கள் மற்றும் கொடி மேடைகள் அகற்றப்பட்டன. இந்த பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு