மாவட்ட செய்திகள்

அடையாறு ஆற்றில் மாயமான சிறுவனை தேடும் பணி தொடருகிறது

சைதாப்பேட்டை அடையாறு ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி மாயமாகினர். தீயணைப்பு துறையினர் தேடுதல் பணியை தொடங்க உள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சிறுவர்கள் சந்தோஷ்குமார் (வயது10), ஹரிஷ் (15). இவர்கள் நேற்று முன்தினம் காலை சைதாப்பேட்டை அடையாறு ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி மாயமாகினர். இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் சிறுவர்களை தேடும் பணியை தொடங்கினர்.

அப்போது சிறுவன் சந்தோஷ்குமார் மட்டும் பிணமாக மீட்கப்பட்டான். அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாயமான மற்றொரு சிறுவன் ஹரிஷை நேற்று முன்தினம் இரவு வரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து 2-வது நாளாக நேற்று காலை சைதாப்பேட்டை, கிண்டி, அசோக்நகர் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் 7 ரப்பர் படகுகள் மூலம் அடையாறு ஆற்றில் மீண்டும் தேடுதல் பணியை தொடங்கினர். நேற்று இரவு வரை தேடியும் சிறுவன் ஹரிசை கண்டுபிடிக்க முடியவில்லை. 3-வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) தீயணைப்பு துறையினர் தேடுதல் பணியை தொடங்க உள்ளனர். 2 நாட்கள் தேடியும் ஹரிஷை கண்டுபிடிக்க முடியாததால், சிறுவனின் குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்