மாவட்ட செய்திகள்

மகாத்மா காந்தி தங்கியிருந்த சேவா கிராம ஆசிரமத்தை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்; உத்தவ் தாக்கரே விருப்பம்

மகாத்மா காந்தி தங்கியிருந்த சேவாகிராம ஆசிரமத்தை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விருப்பம் தெரிவித்து உள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் வார்தா மாவட்டத்தில் சுதந்திர போராட்டத்தின் போது தேசத்தந்தை மகாத்மா காந்தி தங்கியிருந்த சேவாகிராம ஆசிரமம் உள்ளது. காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று சேவா கிராம பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மகாத்மா காந்தியை நினைவு கூராமல் நம்மால் நகர முடியாது. அவரின் சிந்தனைகள் தான் சுதந்திரம் பெறுவதற்கான திட்டங்களை செயல்படுத்தும் உந்துதலை கொடுத்தது. சேவா கிராம ஆசிரமத்திற்கு உலக பாரம்பரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். ஆயுதமில்லாமல் போரில் வெற்றி பெற முடியும் என்பதை காந்திஜி உலகிற்கு காட்டினார். சுதந்திர போராட்டத்தை மிகப்பெரும் இயக்கமாக மாற்றியவர் காந்தி. நமது தலைமுறையினர் அவரை அனுபவிக்க முடியாமல் போனது துரதிருஷ்டவசமானது. எனினும் அவருடன் இருந்தவர்கள் மூலம் அவரை நாம் உணர்ந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு