பெரம்பலூர்,
பள்ளி கல்வித்துறை சார்பில் இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.) நடத்தும் தமிழ்நாடு மாநில அளவிலான ஸ்கேட்டிங் தேர்வு போட்டிஇம்மாதம் 30-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. 30-ந்தேதி மாணவிகளுக்கான தேர்வு போட்டி ஸ்கேட்டிங் மைதானத்தில் நடக்கிறது. அக்டோபர் 1-ந்தேதி காலை 6 மணி அளவில் இருபாலருக்கும் சாலையோர ஸ்கேட்டிங் தேர்வு போட்டி மாவட்ட போலீஸ் அலுவலகம் முன்பு நடக்கிறது. 2-ந்தேதி மாணவர்களுக்கான ஸ்கேட்டிங் தேர்வு போட்டி ஸ்கேட்டிங் மைதானத்தில் நடக்கிறது.
11, 14, 17, 19-வயதுக்கு உட்பட்ட 4 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித் தனியே போட்டி நடத்தப்பட உள்ளது. இப்போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாணவ-மாணவிகள் வருகை புரிந்து கலந்து கொள்ள உள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 6 மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 48 மாணவ-மாணவிகள் வருகிற டிசம்பர் மாதம் 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை கர்நாடகா மாநிலம் பெல்காமில் நடைபெறும் தேசிய போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.