மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி பகுதியில் 108 இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்படுகிறது

கன்னியாகுமரி பகுதியில் 108 இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்படுகிறது.

தினத்தந்தி

கன்னியாகுமரி,

விநாயகர் சதுர்த்தி விழா 2-ந் தேதி (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி பகுதியில் பிரதிஷ்டை செய்வதற்காக அகஸ்தீஸ்வரம் இந்து முன்னணி சார்பில் 108 இடங்களுக்கு விநாயகர் சிலைகள் டெம்போவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவுக்கு 7 அடி உயர விநாயகர் சிலை அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சிலை, விவேகானந்த கேந்திரா வளாகத்தில் அமைந்துள்ள யேகாச்சர மகா கணபதி கோவிலில் பூஜைக்காக வைக்கப்பட்டது.

கடலில் கரைக்கப்படும்

நிகழ்ச்சியில் விவேகானந்த கேந்திராவின் செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தர் ராவ், நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீபத்மநாபன், கேந்திர வளாக பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

108 இடங்களிலும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வழிபாடு முடிந்த பிறகு வருகிற 8-ந்தேதி மதியம் 2 மணி அளவில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் முன் கொண்டு வரப்படுகிறது. பின் னர் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட இந்து முன்னணி துணைதலைவர் எஸ்.பி.அசோகன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு