மாவட்ட செய்திகள்

திருமண ஏக்கத்தில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

வெங்கல் அருகே திருமண ஏக்கத்தில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே அன்னை கோமதி நகர் குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வந்தவர் செல்வகுமார் (வயது 40). இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமண ஏக்கத்தில் இருந்ததாக கூறப் படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அன்னை கோமதி நகர் குடியிருப்பில் செல்வகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். செல்வகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்