மாவட்ட செய்திகள்

பொங்கல் பண்டிகைக்கு வழங்க இலவச வேட்டி-சேலைகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி மும்முரம்

பொங்கல் பண்டிகைக்கு வழங்க கொண்டு வரப்பட்டுள்ள இலவச வேட்டி சேலைகள் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.

பல்லடம்,

தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு "பொங்கல்" பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கி வருகிறது.

இதன் அடிப்படையில் இந்த வருடம் வழங்க 46 ஆயிரத்து 500 இலவச வேட்டி, சேலைகள் பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தது.இது குறித்து தாசில்தார் தேவராஜ் கூறுகையில் பல்லடம் தாலுகாவில் 74 ஆயிரத்து 291 ரேஷன் அட்டைகள் உள்ளன. அரசு பொங்கல் பரிசு தொகுப்பாக, ரூ.2,500 மற்றும் கரும்பு, வெல்லம், அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுகிறது.

வறுமை கோட்டுக்கு கீழே உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி- சேலைகள் வழங்கப்படும். அந்த வகையில் பல்லடம் தாலுகாவில் உள்ள 58 ஆயிரத்து 547 வறுமை கோட்டுக்கு கீழே உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்க 46 ஆயிரத்து 500 இலவச வேட்டி, சேலைகள் வந்துள்ளது.தற்போது ரேஷன்கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றுவருகிறது. நாளை (இன்று) முதல் உரிய பயனாளிகளுக்கு "பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி, சேலைகள் சேர்த்து வழங்கப்படும், என்று தெரிவித்தார்.

அவினாசி

அவினாசி தாலூகாவிற்குட்பட்ட பெருமாநல்லூர், கருவலூர், சேவூர், தெக் கலூர் உள்ளிட்ட பகுதிகளில் 111 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது.இந்த கடைகளில் 66 ஆயிரத்து 500 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசாக ரூ.2500, மற்றும் கரும்பு, வெல்லம், அரிசி ஆகியவைகள் வழங்கப்பட உள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் இலவச வேட்டி-சேலையும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அவினாசி தாலுகா அலுவலகத்திலிருந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இலவச வேட்டி-சேலைகள் அனுப்பி வைக்கப்பட்டு அனைவருக்கும் பொங்கல் பரிசுடன் வழங்க வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்