மாவட்ட செய்திகள்

லாட்டரி வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

லாட்டரி வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி,

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக கடந்த மாதம் 22-ந் தேதி புத்தூரை சேர்ந்த லாட்டரி வியாபாரி எஸ்.விஆர். மனோகரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 செல்போன்கள், வங்கியின் ஏ.டி.எம். கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர் மீது ஏற்கனவே உறையூர் போலீஸ் நிலையத்தில் 20 வழக்குகளும், அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகளும், கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் 2 வழக்கு களும், கோட்டை போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகளும், காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் 7 வழக்குகளும், பாலக்கரை போலீஸ் நிலையத்தில் 2 வழக்கு களும் என மொத்தம் 43 வழக்குகள் உள்ளன. இவர் பல ஆண்டுகளாக தொடர்ந்து இதுபோன்று கள்ளத்தனமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததால், இதனை தடுக்கும் பொருட்டு எஸ்.வி.ஆர். மனோகரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். அதன்பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் நேற்று வழங்கப்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு