மாவட்ட செய்திகள்

கணவர் கண் எதிரே பரிதாபம் லாரி மோதி பெண் பலி

கணவர் கண் எதிரே லாரி மோதி பெண் பலியானார்.

வண்டலூர்,

சென்னை திருவேற்காடு தேவி நகர் பகுதியை சேர்ந்தவர் கனகா என்கிற கனகவல்லி (வயது 63), இவர் நேற்று முன்தினம் தனது கணவர் துரைராஜ் (வயது 66), என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மண்ணிவாக்கம் அருகே உள்ள வெளிவட்ட சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பின்னால் வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கனகவல்லி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். துரைராஜ் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செந்தாமரை (வயது 75), இவர் சொந்த வேலை விஷயமாக நேற்று காலை கூடுவாஞ்சேரிக்கு வந்தார். பின்னர் ஜி.எஸ்.டி. சாலையோரமாக நடந்து செல்லும்போது பின்னால் வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் செந்தாமரை மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த செந்தாமரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தாமரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்